முதல் முறையாக அறுவை சிகிச்சையின் மூலம் 4 முதலைகள், 18 சிங்கங்களுக்கு கருத்தடை ஆபரேஷன்

சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி அறுவை சிகிச்சை நிபுணர்கள் முதல் முறையாக 4 முதலைகள், 18 சிங்கங்களுக்கு அறுவை சிகிச்சையின் மூலம் கருத்தடை அறுவை செய்தனர்.

அறுவை சிகிச்சை

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள 4 முதலைகளுக்கும், சர்க்கஸ் மற்றும் தனியார் வசம் இருந்த பாரம்பரியம் தெரியாத 18 ஆண் சிங்கங்களின் இனப்பெருக்கத்தை தடுப்பதற்காக அறுவை சிகிச்சையின் மூலம் கருத்தடை செய்யப்பட்டது.

இந்த சிகிச்சையை சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவ கல்லூரி துறை பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர் ஆர்.சுரேஷ்குமார், பேராசிரியர் டாக்டர் பி.ஜஸ்டின் வில்லியம், இணை பேராசிரியர் டாக்டர் ஜி.தனஞ்ஜெயராவ் ஆகியோர் கொண்ட குழு செய்தது. இந்த அறுவை சிகிச்சை செய்வதற்கு 3 மணி நேரம் ஆகியது.

இது குறித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ப.தங்கராஜ் கூறியதாவது:-

முதன்முÛ
முதலைகளில் இது போன்ற அறுவை சிகிச்சையை முதல் முறையாக சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரி அறுவை சிகிச்சை துறை நிபுணர்கள் வெற்றிகரமாக செய்து இருக்கிறார்கள். பொதுவாக வெளி தோற்றத்தை வைத்து ஆண், பெண் முதலைகளை இனவாரியாக பிரிப்பது கடினம். முதலைகள் வருடத்திற்கு இருமுறை 25 முதல் 30 வரை முட்டைகள் இடும். அதனால் முதலைகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்த அறுவை சிகிச்சை காரணமாக ஆண் முதலைகள், பெண் முதலைகளோடு இனச் சேர்க்கை செய்ய முடியும். ஆனால் இன விருத்தி நடைபெறாது.

இந்த அறுவைக்கு 3 மணி நேரம் ஆகும். அதன் பிறகு முதலைகள் 6 மணி நேரம் மயங்கிய நிலையிலே இருக்கும். அதன் பிறகு இதர சாரசரி முதலைகள் போல் செயல் பட தொடங்கும்.

சர்க்கஸ் சிங்கங்கள்

சிங்கங்களை பொறுத்தவரையில் சர்க்கஸ் மற்றும் தனியார் வசம் இருந்த பாராம்பரியம் தெரியாத 18 சிங்கங்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் கருத்தடை ஆபரேஷன் மேற்கொண்டு உள்ளோம். சிங்கங்கள் எந்த வகையை சேர்ந்தது என்பது பற்றி தெரியாததால் அவற்றை இனப்பெருக்கத்தில் ஈடுபடுத்த முடியாது. அதனால் பரம்பரியம் தெரியாத 18 சிங்கங்களுக்கும் கருத்தடை ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது.

இந்த அறுவை சிகிச்சையை தொடர்ந்து வெள்ளாடு மற்றும் செம்மறியாடுகளில் ஏற்படும் ஆந்த்ராக்ஸ்(அடைப்பான்) நோய்களை தடுக்க நிரந்தரமான, பக்க விளைவு இல்லாத தடுப்பு மருந்தை கண்டுப்பிடிப்பதற்காக கடந்த 3 ஆண்டு காலம் பாடுபட்டோம்.

இதற்காக அரசு ரூ.13 லட்சம் ஒதுக்கீடு செய்தது. தாவர எண்ணையில் இருந்து தற்போது புதிய வகை தடுப்பு மருந்தை கண்டு பிடித்து இருக்கிறோம். இந்த மருந்தை 6 மையங்களில் வைத்து சோதனை செய்து பார்த்து இருக்கிறோம். இந்த மருந்தில் பக்க விளைவுகள் இருக்காது. வெள்ளாடுகளுக்கும், செம்மறியாடுகளுக்கும் வரும் நோய்களுக்கு இந்த மருந்து தீர்வாக அமையும்.

கருத்தரங்கம்

வரும் 28, 29-ந் தேதிகளில் நடைபெறும் ``கால்நடைகளில் தோன்றும் புதுவகை நுண்ணுயிர் நோய்களும் மற்றும் கால்நடை உயிர் தொழில் நுட்பவியலின் பயன்பாடுகளும்' என்ற கருத்தரங்கில் புதிய வகை தடுப்பூசியை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி வெளியிடுகிறார்.

இந்த கருத்தரங்கில் வெர்ஜினியா மற்றும் மெரிலேண்ட் பல்கலைக்கழகத்தின் சார்பாக 15 வல்லுனர்கள் மற்றும் இந்தியா முழுவதிலும் இருந்து 150 விஞ்ஞானிகள் பங்கேற்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments: