கூகுலின் புதிய சேவை

எத்தனை நாளுக்கு தான் கூகுலும் நாளிதழ்களின் விரோதி என்னும் புகாரையும் விமர்சனத்தையும் கண்டும் காணாமல் இருக்க முடியும்.அது தான் நாளிதழ்களின் நண்பனாக தன்னை காட்டிக்கொள்ளும் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது.

‘பாஸ்ட்பிலிப்’ என்னும் பெயரிலான இந்த சேவை நாளிதழ் செய்திகளை விரைவாகவும் சுலபமாகவும் படிக்க உதவுவதாக கூகுல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது பத்திரிக்கைகளை புரட்டி பார்ப்பது போலவே இந்த சேவையின் மூலம் செய்திப்பக்கங்களை புரட்டி பார்த்து படிக்க முடியும் என கூகுல் கூறுகிறது.

இந்த செய்தி சேவைக்ககாக கூகுல் நியூயார்க் டைம்ஸ்,வாஷிங்டன் டைம்ஸ் உள்ளிட்ட பிர‌ப‌ல‌ செய்திதாள் நிறுவ‌ன‌ங்க‌ளோடு ஒப்ப‌ந்த‌ம் செய்து கொண்டுள்ள‌து.

கூகுல் ஏற்க‌ன‌வே கூகுல் நியூஸ் என்னும்பெய‌ரில் செய்தி சேவையை வ‌ழ‌ங்கி வ‌ருகிற‌து.இந்த‌ சேவை பிர‌ப‌ல‌மாக‌ இருந்தாலும் நாளித‌ழ் நிறுவ‌ன‌ங்க‌ளால் க‌டுமையாக‌ விம‌ர்சிக்க‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து.த‌ங்க‌ள் செய்திக‌ளை எடுத்து வெளியிட்டு கூகுல் விள‌ம்ப‌ர‌ம் மூல‌ம் காசு பார்ப்ப‌தாக‌ நாளித‌ழ்க‌ள் சார்பில் குற்ற‌ஞ்சாட்ட‌ப்ப‌டுகிற‌து.
பொதுவாக‌வே நாளித‌ழ்க‌ளுக்கு இது சோத‌னையான‌ கால‌ம் தான்.இண்டெர்நெட்டின் போட்டி கார‌ண‌மாக‌ நாளித‌ழ்க‌ளின் வ‌ருவாய் பாதிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. இந்நிலையில் கூகுலின் செய்தி சேவையை ஒரு சுர‌ண்ட‌லாக‌வே நாளித‌ழ்க‌ள் பார்க்கின்ற‌ன‌.த‌ங்க‌ள் உழைப்பை உறிஞ்சித்தின்னும் ஒட்டுண்ணி என்று வால் ஸ்டிரீட் ஜ‌ர்ன‌ல் ஆசிரிய‌ர் ச‌மீப‌த்தில் காட்ட‌மாக‌வே கூறியிருந்தார்.

இந்த‌ பின்ன‌ணியில் தான் கூகுல் பாஸ்ட்பிலிப் செய்தி சேவையை அறிமுக‌ம் செய்துள்ள‌து.கூகுல் செய்தி சேவைக்கும் இதற்கும் அடிப்படையிலேயே வித்தியாச‌ம் உள்ள‌து.பாஸ்ட்பிலிப் சேவையில் செய்தி ப‌க்க‌ங்க‌ள் புகைப்ப‌ட‌ம் போல‌ ஒவ்வொன்றாக‌ கிளிக் செய்வ‌து போல அமைந்திருக்கிற‌து.ஒவ்வொன்றாக‌ கிளிக் செய்தால் ப‌டித்துக்கொண்டே போகலாம்.

இர‌ண்டு கார‌ண‌ங்க‌ளுக்காக‌ கூகுல் இவ்வாறு செய்துள்ள‌து.ஒன்று வ‌ழ‌க்க‌மான‌ செய்தி இணைப்பை காட்டிலும் இப்ப‌டி கிளிக் செய்யும் போது ப‌த்திரிக்கையை புர‌ட்டும் உண‌ர்வை பெற‌ முடியும்.அதைவிட‌ முக்கிய‌மாக‌ ப‌க்க‌ங்க‌ள் ட‌வுண்லோடு ஆவ‌தும் விரைவாக‌ இருக்கும்.

செய்தி த‌ள‌ங்க‌ளுக்கு செல்லம் போது குறிப்பிட்ட ப‌க்க‌ங்க‌ள் ட‌வுண்லோடு ஆவ‌து தாம‌தாவ‌தே இணைய‌வாசிக‌ள் அதிக‌ நேர‌ம் செய்தி த‌ள‌ங்க‌ளில் த‌ங்காத‌த‌ற்கான‌ கார‌ண‌மாக‌ க‌ருத‌ப்ப‌டுகிற‌து.மாறாக‌ புர‌ட்டிப்பார்க்கும் வ‌ச‌தியோடு விரைவாக‌ ப‌டிப்ப‌து சாத்திய‌மானால் இணைய‌வாசிக‌ள் அதிக‌நேர‌ம் செல‌விடுவார்க‌ள் என்று கூகுல் எதிர‌பார்க்கிற‌து.இத‌னால் அதிக‌ விள‌ம்ப‌ர‌ங்க‌ளை வெளியிட‌ முடியும்.

செய்தி சேவையில் கூகுல் விள‌ம்ப‌ர‌ வ‌ருவாயை தானே வைத்துக்கொண்டாலும் பாஸ்ட்பிலிப் சேவையில் வ‌ருவாயை நாளித‌ழ்க‌ளோடு ப‌கிர்ந்து கொள்ள‌ முன்வ‌ந்துள்ள‌து.அதாவது இணைந்து சம்பாதிப்போம் என கூகுல் நாகிதழ்களோடு கைகோர்த்துள்ளது.

ப‌த்திரிக்கைகளை ப‌டிக்கும் அனுப‌வ‌த்தையும் வ‌ச‌தியையும் இண்டெர்நெட் தொழில்நுட்ப‌த்தோடு இணைந்துத‌ரும் வ‌ச‌தியாக‌ கூகுல் இத‌னை வ‌ர்ணித்துள்ள‌து.

இந்த‌ சேவை வெற்றி பெற்றால் நாளித‌ழ்க‌ளுக்கு வ‌ருவாய் வ‌ருவ‌தோடு கூகுல் மீதான‌ விம‌ர்ச‌னமும்,கோபமும் குறையும்.

No comments: