பிராண வாயு தோன்றுவதற்கு முன்பே உயிரினங்கள் இருந்தன

பூமியில் பிராண வாயு தோன்றுவதற்கு 200மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே கடல்களில் உயிரினங்கள் வாழ்ந்ததாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

பூமியின் வரலாற்றில் 'ஆர்ச்சியன்' காலக் கட்டம் என்று அழைக்கப்படும் காலத்தில் விஷ வாயுக்களான மீத்தேன், அம்மோனியா மற்றும் பிற விஷ வாயுக்களே இருந்தன. இதனால் இந்தக் காலக்கட்டங்களில் உயிரினங்கள் இருந்திருக்க வாய்பே இல்லை என்றுதான் இது நாள் வரையிலான ஆய்வுகள் தெரிவித்து வந்தன.

தற்போது நியூஜெர்சியில் உள்ள ரட்ஜர்ஸ் பல்கலைக் கழகத்தின் புதிய சர்வதேச ஆய்வுக் குழு, பூமியில் சுவாசிப்பதற்கான வாயு இல்லாத காலக் கட்டத்திலும் தாவரம் போன்ற பாக்டீரியாக்கள் இருந்ததாக கண்டு பிடித்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவின் 2 அல்லது 3 பில்லியன் ஆண்டுகள் பழைமையான கடலடி பாறைகளின் மீதங்களை வைத்து நடத்திய ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நைட்ரஜன் சுழற்சியின் ரசாயன ஆதாரங்கள் இதனை நிரூபித்துள்ளதாக கூறும் இந்த ஆய்வு, பிராண வாயு இல்லாமல் இருந்திருந்தால் இது நடக்க வாய்ப்பேயில்லை என்று கூறியுள்ளது.

வாழும் உயிரிகள் நைட்ரஜன் சுழற்சியைப் பெற்று மேலும் சிக்கலான இயற்கை மூலக் கூறுகளை உற்பத்தி செய்துள்ளது.

இந்த நைட்ரஜன் சுழற்சியின் இருப்பு பூமியில் பிராண வாய்வு தோன்றுவதற்கு முன்பே உயிரினங்கள் இருந்ததற்கான சுவடு என்று இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒளி இயைபாக்க (Photo Synthesis) நடவடிக்கை மூலம் பிராண வாயுவை ஒரு துணைப்பொருளாக உற்பத்தி செய்த உயிரிகள் சுமார் 2.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்தான் தோன்றியுள்ளன என்று கூறும் இந்த ஆய்வாளர்கள், அதன் பிறகு 200 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகே வளி மண்டலத்தை பிராண வாயு செறிவூட்டியது என்று கூறியுள்ளனர்.

"நைட்ரஜன் ஒப்பு நோக்கி பார்க்கப்படும்போது, ஒரு அசையா மூலக்கூறும், அதன் வளிமண்டல ஆயுள் ஒரு பில்லியன் ஆண்டுகள்" என்கிறது இந்த ஆய்வு.

மாறாக பிராண வாயு உற்பத்திக்கான ஒளி இயைபாக்கம் தொடர்ச்சியாக நடைபெறும் ஒரு நடவடிக்கையாகும்.

இருப்பினும் பூமியில் எப்போது பிராண வாயு ஒளி இயைபாக்கம் தொடங்கியது என்பது இன்னமும் புரியாத புதிராகவே உள்ளது என்று இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments: