ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அமெரிக்க விருது


ஆலிவுட்டில் தயாரான ஸ்லம்டாக் மில்லியனர் என்ற படத்துக்கு இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்து இருந்தார். இவருக்கு அமெரிக்காவின் கிரிட்டிக்ஸ் சாய்ஸ் விருது கிடைத்து உள்ளது. இந்த படம் சிறந்த படமாகவும், இதை இயக்கிய டானி பாய்லே சிறந்த டைரக்டராகவும், சைமன் பீயுபாய் சிறந்த திரைக்கதாசிரியராகவும் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளனர்.

இதில் நடித்த நடிகர் தேவ் பட்டேல் சிறந்த நடிகராகவும் தேர்ந்து எடுக்கப்பட்டார். இந்த படம், மும்பையில் எடுக்கப்பட்டது. டி.வி. நிகழ்ச்சியில் பரிசு பெற்று கோடீசுவரர் ஆன மும்பை குடிசை வாழ் இளைஞரை பற்றிய படம் இது.

விருது வழங்கும் விழா கலிபோர்னியாவில் நடந்தது. இதில் ஏ.ஆர்.ரகுமான் கலந்து கொண்டு விருது பெற்றார். டி.வி. சேனல்கள், ரேடியோ, இணையதளம் ஆகியவற்றில் சினிமா விமர்சகர்களாக பணிபுரிபவர்களின் சங்கம் தான் இந்த விருதுக்களை வழங்கி வருகிறது.

No comments: