காலால் இயக்கப்படும் கணினி மவுஸ்


கம்பியூட்டரை இயக்குவதற்கு `மவுஸ்' என கூறப்படும் கருவி அவசியம். அதை கையால்தான் இயக்கவேண்டும். இப்படி கையால் மவுசை அதிக அளவில் இயக்கும்போது, கைவிரல் நரம்புகளில் காயம் ஏற்படுவது உண்டு. இதற்கு ரெபடேடிவ் ஸ்ட்ரெய்ன் இன்ஜுரி (ஆர்.எஸ்.ஐ.) என்று பெயர். இங்கிலாந்தில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த காயத்தால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இதை தவிர்ப்பதற்கு புதிய வழி கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. அதன்படி கைகளால் இயக்கப்படுவதற்கு பதிலாக காலால் இயக்கும் `மவுஸ்' கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

கால் மவுசை பயன்படுத்துவதன் மூலம் கைவிரல் மற்றும் மணிக்கட்டில் ஏற்படும் ஸ்ட்ரெசை குறைப்பதற்கு உதவும். இதற்கு என்று தனியாக `ஸ்லிப்பர்' உள்ளது. அதை போட்டுக்கொண்டு தான் இந்த மவுசை இயக்கவேண்டும்.

No comments: