அமெரிக்க பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 8 குழந்தைகள்

அமெரிக்காவில் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள ஒரு நிறைமாத கர்ப்பிணி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட் டிருந்தார். அவருக்கு ஸ்கேன் எடுத்து பார்த்ததில் வயிற்றில் ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இதனால் ஆஸ்பத்திரிலேயே தங்க வைத்து சிகிச்சை அளித்தனர். அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. குழந்தைகள் இயற்கையாக பிரசவமானால் சிக்கல் ஏற்படும் என்று டாக்டர்கள் கருதினார்கள்.இதனால் சிசேரியன் ஆபரேஷன் செய்து குழந்தைகள் வெளியே எடுக்கப்பட்டது. மொத்தம் 8 குழந்தைகள் பிறந்தன. இதில் 6 ஆண் குழந்தைகள், 2 பெண் குழந்தைகள்.

இந்த குழந்தைகள் 820 கிராமில் இருந்து. 1 கிலோ வரை இருந்தன. அனைத்து குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அந்த பெண்ணின் பெயர் மற்றும் விபரங்களை இதுவரை வெளியிட வில்லை.

ஒரே பிரசவத்தில் 8 குழந்தைகள் பிறப்பது இது 2-வது சம்பவம். 1998-ம் ஆண்டு அமெரிக்கா ஹுஸ்டன் நகரில் நிகேன் என்ற பெண்ணுக்கு 8 குழந்தைகள் பிறந்தன. அதில் ஒரு குழந்தை ஒரு வாரம் கழித்து இறந்து விட்டது. மற்ற 7 குழந்தைகளும் சமீபத்தில் தான் தங்கள் பிறந்த நாளை கொண்டாடின.

No comments: