பூமியைப் போன்று விண்வெளியில் மிதக்கும் வேறு கோள்களில் உயிரினங்கள் வாழ்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளதா ? என்பது இன்றளவும் விஞ்ஞான உலகில் புரியாத புதிரகவே உள்ளது. பறக்கும் தட்டுக்கள் , வேற்றுக்கிரக வாசிகள் என்றெல்லாம் அவ்வப்போது சஞ்கைகளில் மர்மத் தகவல்கள் வெளியாகுகின்ற போதிலும் இதன் உண்மைத்தன்மை பற்றி யாராலும் இது வரை விரிவாகத் தெளிவுபடுத்தப்பட்டவில்லை.
இந்தப் புரியாத புதிர்களுக்கெல்லாம் விடைகான விஞ்ஞான ஆராட்சியாளர்கள் நீண்ட காலமாகவே முயன்று வருகிறார்கள்.
விஞ்ஞானிகள் விண்வெளி ஓடங்களில் வேற்றுக் கிரகங்களுக்கு சென்று இது சம்பந்தமாக ஆய்வுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார்கள். இதன் பெறுபேறுதான் என்ன? விண்வெளியில் மிதக்கும் சனிக்கிரகம் பற்றிய ஆராட்சியில் அமெரிக்க விஞ்ஞானிகள் காசினி என்ற விண்கலத்தை ஈடுபடுத்தி உள்ளார்கள்.
இந்த விண்ணோடம் சனிக்கிரகத்தின் துணைக்கோள்களில் மிகப் பெரிய துணைக்கோளாக இருக்கும் டைட்டான் பற்றி ஒரு புதிய பரபரப்புத் தகவல் ஒன்றை அனுபி வைத்துள்ளதாம் .
அது பற்றி அமெரிக்காவின் மேரிலாண்ட்டில் உள்ள இயற்பியல் விஞ்ஞான கூடத்தில் பணியாற்றி வரும் விஞ்ஞானி ரால்ப் லோரன்சம் , அவரது நண்பர்களும் தீவிர ஆராட்சியில் ஈடுபட்டிருந்தனர்.
அதன் அடிப்படையில் கடந்த 2004 ஆம் ஆண்டிலிருந்து அது அனுப்பிய புள்ளிவிபரங்கள் அவர்களால் ஒப்பிட்டு பார்க்கப்பட்டதாம் . அப்போது அதன் பூகோள அமைப்புக்கள் ஆராட்சிக்குட்படுத்தப்பட்டபோது , அதன் புறப் பரப்பில் ஒரு மாற்றம் தெரியவந்த தாம் .
அதாவது நிலையான இடத்தில் இருந்து நகர்ந்திருந்ததாம் இதன் மூலம் அந்தக் கிரகத்தின் சூழற்சி அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளதாக இது தொடர்பில் ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இவர்களின் இந்தத் தகவல்களின் படி சனிக்கிரகத்தின் துணைக் கோளில் ஆழமான கடல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஊர் ஜீதப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பெறு பேற்றை அடிப்படையாகக் கொண்டு சனிக்கிரகத்தின் மிகப் பெரிய துணைக்கோளன டைட்டானில் மனிதர்கள் வசிக்கிறார்களா ? என்பது பற்றி அறிய அமெரிக்க விஞ்ஞானிகள் பரபரப்பான ஆராட்சிகளில் தற்போது ஈடுபட்டுள்ளார்கள்
1 comment:
அருமையான ஆக்கங்கள் தொடர்ந்தும் எழுதுங்கள் . . .
விரைவில் தமிழ்மணம் தேன்கூடு போன்ற திரட்டிகளில் இணைக்கப்பாருங்கள் :))
Post a Comment