இணையப்பக்கம் தயாரித்தல்

இந்தக் கட்டுரையை பொழுது போக்காகவே எழுதுகிறேன். இதை எழுதுவதற்கு முன் பல கேள்விகளுக்கு எனக்கு நானே பதில் சொல்ல வேண்டியவனாய் இருக்கிறேன். முதலில் கணனி பற்றிய கலைச் சொற்கள். நான் இங்கு இன்ரனெற் பற்றி ஒன்றுமே தெரியாதவர்கள் கூட புரிந்து கொள்ளும் வகையில் எழுத விரும்புகிறேன். இதில் சர்வதேச கலைச் சொற்களையா? ஆங்கிலச் சொற்களையா? அல்லது தமிழ்க் கலைச்சொற்களையா? எதைப் பயன்படுத்துவது. நிச்சயமாகத் தமிழ்க் கட்டுரை ஒன்றிற்குத் தமிழ்ச் சொற்களையே பயன்படுத்த வேண்டும். ஆனால் இங்கு பிரச்சினை அதுவல்ல.
எந்தத் தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்துவது என்பதே பிரச்சினை. உதாரணமாக ஐவெநசநெவ என்ற சொல்லை அநேகமாக அனைத்து மொழிகளிலும் இப்படியே அழைப்பர்;. ஆனால் தமிழில் இதற்கு இணையம் என்ற சொல் கண்டுபிடிக்கப்பட்டிருந்தபோதும், மேலும் பிரத்தியேகமாக சர்வதேசவலை, வலைப்பின்னல், இணையவலை போன்ற பலசொற்கள் பயன்படுத்தப்படுவதையும் காணக் கூடியதாக இருக்கிறது. இதுதவிர இன்னும் பல சொற்களுக்கு தமிழ்க்கலைச் சொற்கள் கண்டுபிடிக்கப்படாமலேயே இருக்கிறது. அல்லது எல்லோர் கைளுக்கும் கிடைக்கும் வகை இன்னமும் செய்யப்படவில்லை. இப்படியான சூழ்நிலையில் தகவல் தொழில் நுட்பம் சம்பந்தமான ஆங்கிலச் சொற்களை எப்படித் தமிழில் அழைப்பது? ஆங்கிலத்தின் மொழி பெயர்ப்பாக நானே ஒரு தமிழ் சொல்லை உருவாக்குவதா? இது சிறந்ததாக எனக்குப் படவில்லை. ஒவ்வொருவரும் தமது அறிவுக்கு எட்டியவரை புதிய கலைச் சொற்களை உருவாக்குவதால் குறை நீங்குவதற்குப்பதில் குழப்பத்தையே ஏற்படுத்தும். எனவே நான் ஆங்கிலச் சொற்களை அப்படியே ஆங்கிலத்திலேயே எழுதுகிறேன். ஆனால் அவற்றின் செயற்பாடுகள் பற்றி விளக்கவுள்ளேன்.எனவே ஆங்கில அறிவு இல்லாதவர்களும் இதனைப் படித்துப் பயன் பெற முடியும். சொல்லப்போனால் கணனி பற்றி அறிவு இல்லாதவர்கள் கூட பயன்பெறும் முறையில் இதை எழுதுகிறேன்.
நல்வரவு HTMLநான் முதலில் கூறியது போல் தமிழ் தெரிந்த அனைவரும் பயன் பெற வேண்டுமெனிலும் உங்களிடம் கணனியும் அத்துடன் அதில் windows 95 அல்லது அதற்கு மேலான மென்பொருள் (software) இருந்தால் நன்று. இந்த நூலில் நான் எழுதும் விளக்கங்கள் விண்டோசை அடிப்படையாகக் கொண்டதே. ஆயிறும் நீங்கள் தயாரிக்கும் பக்கங்களை Macintosh, UNIX போன்ற system களிலும் பார்க்கமுடியும்.
(Web page) இணையப் பக்கம் தயாரித்தல்.இணையப்பக்கம் தயாரிப்பதற்கு HTML என்ற மொழி பயன்படுத்தப்படுகிறது. HTML என்றால் என்ன? Hypertext Markup Language என்பதன் சுருக்கமே. இந்த HTML இல் எழுதுவதற்கு நீங்கள் விலை கூடியதொரு புறோகிராமை (program) ஐ வாங்க வேண்டியதில்லை. அது உங்கள் விண்டோசிலேயே உள்ளது. Notepad அல்லது Editor இல் HTML மொழியை எழுத முடியும்.
HTML ஆரம்பம்ஒரு வெப் பக்கத்தின் ஒவ்வொரு சிறு நடவடிக்கைக்கும் தனித்தனி HTML குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தக் குறியீடுகள் இரண்டு வகைப்படும். தொடக்கக் குறியீடு முடிவுக் குறியீடு.

No comments: