மின் கிருமி (வைரஸ்)

கணணி வைரஸ்கள் இன்றைய கணணி உலகத்தில் மிகப்பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. தினசரி புதுப்புது வைரசுகளும் அவை ஒவ்வொன்றின் செயற்பாடுகளும் வேறுவேறானதாக உள்ளது. இன்றைய இணையப்பாவனையின் வளர்ச்சியும் இவ்வைரஸ்களை மிக வேகமாக உலகின் அனைத்துப்பகுதிகளுக்கும் பரவுவதற்கு வழிசெய்துள்ளது.

உங்களுக்கு தெரியாது உங்கள் கணணிக்கு வரும் வைரஸ்கள் உங்களுக்குத்தெரியாது ஏராளமான செயல்களைச் செய்யம். உதாரணமாகச் சில.

- உங்களிடம் உள்ள மின்னஞ்சல் முகவரிகளுக்கு உங்கள் பெயரில் சில தகவல்களுடன் வைரசும் சேர்த்து அனுப்பலாம்.
- உங்கள் கணணியில் உள்ள முக்கிய ஆவணங்களை மற்றவர்களுக்கு அனுப்பி வைக்கலாம்.
- உங்கள் ஆவணங்களை பழுதாக்கலாம். மாற்றியமைக்கலாம். கணணியையே செயலிழக்க வைக்கும் வைரசுகளும் உண்டு.

இப்படி இவற்றின் செயற்பாட்டினைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

உங்கள் கணணி இணைய இணைப்பில் இருப்பின் கட்டாயம் நீங்கள் ஒரு வைரசினைக் கண்டுபிடிக்கக்கூடிய நிகழ்வு ஒன்றினை வைத்திருத்தல்: அவசியம். அத்துடன் வைரஸ் நிகழ்வு உள்ளதுதானே என்றும் அலட்சியமாக இருந்து விடாதீர்கள். அவைகளையும் தாண்டி வைரஸ்கள் வரக்கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு. அத்துடன் வைரஸ் நிகழ்வினை அடிக்கடி (வாராந்தம்) update செய்யுங்கள். பொதுவாக நீங்கள் வைரஸ் நிகழ்வு ஒன்றினை வாங்கினால் சுமார் ஒரு வருடத்திற்கு இலவசமாக அவர்களின் தளங்களில் இருந்து update செய்யமுடியும்.

அடுத்து உங்களிற்கு தெரியாதவர்களிடம் இருந்து கிடைக்கப்பெறும் மின்னஞ்சல் தொடர்பாகவும் அவதானமாக இருங்கள்.
சில வகை வைரஸ் நிகழ்வுகள்:

Symentec
Norman
McAffe

உங்களிடம் வைரஸ்களைக் கண்டுபிடிப்பதற்கான நிகழ்வு இல்லாதுவிடின் அவற்றினைக்கண்டுபிடிப்பது மிகவும் கஸ்ரம் என்பதைக் கவனத்திற் கொள்ளுங்கள். ஒவ்வொருமுறையும் புதிதுபுதிதாக வந்துகொண்டிருக்கும் வைரசின் தாக்கம் மிக மோசமானதாக உள்ளது. சில வைரஸ்கள் உங்கள் கணணிக்கு வந்து தங்கி விபரங்களை சேகரித்து (உதாரணமாக மறைவுச்சொல், வங்கிக்கணக்கிலக்கம்) வெளியே அனுப்பிக்கொண்டிருக்கும். அதேபோல் சில வைரஸ்கள் உங்கள் கணணிக்கு வந்து தூங்கிவிடும். குறிப்பிட்ட ஒரு காலப்பகுதியின் பின் அவை தனக்கு கொடுக்கப்பட்ட வேலைகளைச் செய்யத்தொடங்கும். ஆதலால் கணணியில் வைரசினால் ஏற்படும் பிரச்சனைகளைக் குறைக்கவும் வைரஸ் வருவதனால் ஏற்படும் இழப்புக்களைத் தவிர்க்கவும் வைரசிற்கான எதிர்ப்பு நிகழ்வு ஒன்றினை கட்டாயம் போட்டுவையுங்கள்.

No comments: