| புதிய தேடியந்திரங்களிலேயே ஸ்மார்ட் ஆஸ் தேடியந்திரத்தை மிகவும் துணிச்சலானது என்று சொல்லலாம். கூகுளுக்கு போட்டியாக முளைத்த எண்ணற்ற தேடியந்திரங்கள் காணாமல் போய்விட்ட நிலையில் புதிதாக முளைத்துள்ள இந்த ஸ்மார்ட் ஆஸ் கூகுளை விட மேம்பட்ட தேடியந்திரம் என்று சொல்வதற்கில்லை. தேடல் உலகை புரட்டிப்போடக்கூடிய புதிய தொழில்நுட்பம் இதன் வசம் இருப்பதாகவும் தெரியவில்லை. ஆனால் கூகுளைப் போல விளம்பர நோக்கிலான முடிவுகள் இல்லாமல் தேடல் முடிவுகளை மட்டுமே இணையவாசிகளுக்கு முன்வைப்பதை ஸ்மார்ட் ஆஸ் தனது தனிச்சிறப்பாக கருதுகிறது. கூகுள் தனது பேராசையால் தேடல் முடிவுகளோடு விளம்பர நோக்கிலான முடிவுகளையும் திணித்து அனைவரையும் அதிருப்தியில் ஆழ்த்தியிருப்பதாக கூறும் ஸ்மார்ட் ஆஸ் பலரும் இந்த நிலையில் மாற்றம் தேவை என்று விரும்புவதாகவும் தெரிவிக்கிறது. அந்த விருப்பத்தை நிறைவேற்றி வைக்கும் நோக்கத்தோடு ஸ்மார்ட் ஆஸ் உதயமாகியிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கூகுளுக்கு பழகியவர்கள் அதிலிருந்து விலகி வர இந்த வாதம் மட்டுமே போதுமா என்று தெரியவில்லை. ஆனால் ஸ்மார்ட் ஆஸிடம் இந்த நம்பிக்கை அதிகமாகவே இருக்கிறது. தேடலுக்கு மட்டும் அல்ல மின்னஞ்சலுக்கும் கூட இணையவாசிகள் தனது சேவையை பயன்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையோடு ஸ்மார்ட் ஆஸ் மின்னஞ்சல் சேவையையும் துவக்கியுள்ளது. பெயருக்கு பின் "ஸ்மார்ட் ஆஸ்" என்று முடியும் மின்னஞ்சல் சேவையை யார் விரும்பி பயன்படுத்துவார்கள் என்பதும் கேள்விக்குறி தான்? ஆனால் ஒன்று இந்த தேடியந்திரம் சுவாரஸ்யமானதாகவே இருக்கிறது. ஆஸ்க் ஜீவ்ஸ் தேடியந்திரத்துக்கு அடையாளமாக ஜீவ்ஸ் பட்லர் இருந்தது போல இதற்கும் ஒரு புத்திசாலி கழுதை அடையாளமாக இருக்கிறது. அந்த கழுதை அவ்வப்போது உதிர்க்கும் பொன்மொழிகள் பல விடயங்களை கற்றுத்தரக்கூடும். அதோடு இணையவாசிகளுக்கு என்று போட்டியும் நடத்தப்பட்டு பரிசும் வழங்கப்படுகிறது. இணையவாசிகள் சமர்பிக்கும் வாசகம் கழுதையின் பொன்மொழியாக இடம்பெறும் வாய்ப்பும் இருக்கிறது. அது மட்டும் அல்ல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் போது நண்பர்களுக்கும் காதலர்களுக்கும் வாழ்த்து செய்தி அனுப்புவது போல் இந்த தேடியந்திரத்தில் இணையவாசிகள் தாங்கள் விரும்பும் வாழ்த்து செய்தியையும் இடம் பெற வைக்கலாம். புதிய அணுகுமுறையோடு இணையத்தில் தேடுங்கள் என்று அழைப்பு விடுக்கும் ஸ்மார்ட் ஆஸ் தன்னிடம் இணைய முகவரிகளை பதிவு செய்து கொள்ளவும் வேண்டுகோள் வைக்கிறது. இந்த தேடியந்திரம் தகுதி வாய்ந்தது தானா என்று இணையவாசிகள் இதனை பயன்படுத்தி பார்க்கலாம். |
கூகிளுக்குப் போட்டியாக இன்னுமொரு தேடும் இயந்திரமா..........?
skype இலிருந்தவாறே facebook இல் அரட்டை அடிக்கலாம் வாங்க.....!

| ஸ்கைப் மிக அண்மையில் தனது புதிய பதிப்பான 5.5 என்ற பீட்டா பதிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த பதிப்பின் மிகப்பெரிய மாற்றமே உங்களது ஸ்கைப் கணக்கில் இருந்தவாறு உங்கள் முகபக்கத்தை(FACE BOOK) அணுகும் வசதி செய்யப்பட்டுள்ளமை ஆகும். இதன் மூலம் உங்கள் முகப்பக்கத்தில் உள்ள நண்பர்களுடன் அரட்டை மற்றும் தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியும். இதன் வசதிகள்: ஸ்கைப் கணக்கில் இருந்தவாறு முகப்பக்கத்தில் ஓன்லைனில் உள்ள நண்பர்களுடன் அரட்டை செய்யலாம். இதற்கு வசதியாக நண்பர்களின் ஓன்லைன் வருகையை ஒவ்வொரு முறையும் உங்களுக்கு தெரியப்படுத்தும். ஸ்கைப் கணக்கில் இருந்தவாறு முகப்பக்கத்தில் நண்பர்கள் பகிர்ந்து கொண்ட தகவல்களை பார்க்க முடிவதுடன் அவற்றுக்கு பதில்(கமெண்ட்)அனுப்பவும், லைக்(like)பண்ணவும் முடியும். இந்த வசதிகளை பெற ஸ்கைப் புதிய பதிப்பினை தரவிறக்கம் செய்து நிறுவிய பின் உங்கள் ஸ்கைப் கணக்கினை திறந்து கொள்ளவும். இப்போது வலது பக்க மூலையில் FACE BOOK பட்டன் தரப்பட்டிருக்கும். அதனை கிளிக் செய்து உங்கள் FACE BOOK கணக்கினை அடைவதற்கான முகவரி மற்றும் கடவுச்சொல் கொடுத்து கிளிக் செய்தால் உங்கள் FACE BOOK தகவல்களை சென்றடைய அனுமதி கோரப்படும். நீங்கள் அனுமதி வழங்குவதன் மூலம் ஸ்கைப் கணக்கில் இருந்தவாறு FACE BOOK பக்கத்தினை அடைய முடியும். |