தற்போதுள்ள WINDOWS 8 இயக்குதளத்தின் அடுத்த பதிப்பாக WINDOWS 10 எனும் புதிய பதிப்பை வரும் ஜூலை மாதம் வெளியிட இருக்கிறது மைக்ரோசாப்ட். என்ன இடைல ஒரு நம்பரக் காணோம் என யோசிக்காதீர்கள். மைக்ரோசாப்ட் தங்களின் மென்பொருள்களுக்கு பெயர் வைப்பதில் அப்படித் தான். தங்களின் XBOX
360 எனும் விளையாட்டு உபகரணத்தின் அடுத்த பதிப்பிற்கு XBOX
ONE என பெயரிட்டார்கள். இணைய வெளியில் WINDOWS மீது ஒரு பொதுப்புத்தி “வெறுப்பு” உள்ளது. இதைக் களைய பல வேலைகளைச்
செய்து வரும் இந்நிறுவனம்.
தனது முக்கிய தயாரிப்பான WINDOWS மென்பொருளின் எதிர்காலத்தை சீரான வருமானம் தரும் வகையில் மாற்ற எடுக்கும் முக்கிய நடவடிக்கை தான் WINDOWS 10. இனி புதிய WINDOWS பதிப்புகளை வெளியிடப் போவதில்லை என அறிவித்திருப்பது, இனி மக்கள் WINDOWS மென்பொருளை எப்படி பயன்படுத்தி விலை கொடுத்து வாங்க வேண்டும் எனும் முறையை மாற்றுகிறது மைக்ரோசாப்ட்.
ஆம்., WINDOWS 7,
8, 10 என பெயர்களில் இனி 10க்கு பின் எந்த மாற்றமும் இனி வரும் காலங்களில் இருக்காது. ஆனால் OS இன் புதிய வசதிகள் வெறும் அப்டேட்களாக மட்டுமே நிறுவப்படும். ஒரு வருடம் WINDOWS பயன்படுத்த இவ்வளவு கட்டணம் என வசூலிக்கப்படும். அந்த வருடத்தில் வரும் அனைத்து புதிய வசதிகளும் இலவசமாக பதிவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம்.
அனைவரையும் வருடா வருடம் சந்தா பணம் கட்டி WINDOWSஐ பயன்படுத்த வைக்க திட்டமிட்டுள்ள மைரோசாப்ட்., அனைவருக்கும் WINDOWS 10 இலவசமாக முதல் வருடம் கிடைக்கும் என அறிவித்துள்ளது. உங்களின் கணினியில் உள்ள WINDOWS 7,
XP , 8 திருட்டு பதிப்பாக இருந்தாலும் உங்களுக்கான WINDOWS 10 Original
பதிப்பு இலவசமாக இணையம் வழியாகக் கிடைக்கும். முதல் வருடம் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். அடுத்த வருடம் முதல் வருடாந்திரக் கட்டணம் இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
No comments:
Post a Comment