வாலி வதை படலம்.... ஒரு சிறிய நோக்கு........!


வானர அரசனான வாலி இந்திரனின் அம்சமாவான். இந்திரன் அழித்த மந்திரமாலையின் சக்தியால் வாலி யாருடன் யுத்தம் செய்ய சென்றாலும் யுத்தம் செய்ய வருபவனின் அரை பலம் வாலியிடம் வந்து தஞ்சமடையும். வாலியை எந்த ஒரு அரசனாலும் நேரில் யுத்தம் செய்து வெல்ல முடியாது. அது ஒரு புறம் இருக்கட்டும். பரம்பொருள் ஏன் வாலியைக் கொல்ல வேண்டும். என்ன காரணம்...? காரணம் உள்ளது... ஏனென்றால் அவன் மாற்றான் மனை தொடுபவன். அவன் செய்கின்ற யுத்தங்கள் எல்லாம் அதர்ம யுத்தம். காரணம் அந்த மந்திரமாலை இல்லாமல் அவன் யுத்தம் செய்வதில்லை.

பரம் பொருள் ஸ்ரீ ராமர் வாலி மீது பாணம் செலுத்திய பின்னர் வாலி அவரைக் குறித்து சில வினாக்களைக் கேட்கிறான். தர்மத்தின் ரூபமான தாங்கள் ஏன் அதர்மம் செய்தீர்கள் என்று கேட்கிறான். அதற்கு பரம்பொருள் பின்வருமாறு பதிலளிக்கிறார். தமது முன்னோரான மாந்தாத்தா அவர்கள் எவ்வாறு ஒரு அதர்மரூபனுக்கு தண்டனை அழித்தார்களோ அதே போல தான் தானும் உனக்கு தண்டனை அழித்திருக்கிறேன். அப்போது வாலி ஸ்ரீ ராமரிடம் அப்படி எந்த தர்மத்தில் எழுதியிருக்கிறது மறைந்திருந்து தாக்குவது தர்மம் என்று என வினவ, அவர் அதற்கு “கொடிய மிருகத்தை மறந்திருந்து தாக்குவது அதர்மம் அல்ல, வானர அரசே” என்று பதிலழிக்கிறார். அது மட்டுமல்ல பலவானின் தவறு கூட தர்மமாகும் என எண்ணி பாவம் செய்த உனக்கு தண்டனை அழித்தது தவறில்லை எனக் கூறுகிறார். அதற்கு வாலி தான் கொடியமிருகம் அல்ல எனக்கூறுகிறான்.
ஸ்ரீ ராமரோ, “ நீ நரமிருகமாவாய், மிருகம் கூட பசி எடுத்தால் தான் வேட்டையாடுகிறது, ஆனால் நீ நினைத்த கணத்தில் வேட்டையாடுகிறாய் அதுவும் அடுத்தவன் துணைவியை, அதனால் தான் நீ உனது தீய திருஷ்டியை சுக்கிரீவனின் மனைவியில் வைத்தாய்..... ” என்று பதிலளிக்கிறார்.

“பேச்சில் தீச்செயல் கொண்டவன் சகல உயிர்களின் ஆனந்தமதை அழிப்பவன் நமது விரோதியாய் இல்லாவிட்டாலும் அவனை வதம் செய்ய வேண்டும்... நமது உடன் பிறந்தவனின் மனைவி, நமக்கு சகோதரியாக, நமக்கு மகளாக, ஏன்... மாதாவாகவும் தெரிய வேண்டும்... இந்த விதியை மீறுபவன் மன்னனாய் இருந்தாலும் மடியத்தான் வேண்டும், எனவும் பதிலளிக்கிறார்.

அதற்கு வாலி, எனக்கு தண்டனை அழிக்கும் அதிகாரத்தை உமக்கு அழித்தது யார்... நீர் யார் என்று குழப்பமடைய, அதற்கு தான் இஷ்வாகு வம்சத்தில் வழி வந்தவர்... தனக்கு அதர்மத்துக்கு எதிராக தண்டனை அழிக்கும் அதிகாரம் இருக்கிறது என பரம்பொருள் பதிலளிக்கிறார்.

இறுதியில் வாலியும் பரம்பொருளை அடையாளம் கண்டு கொண்டான். சுக்கிரீவனிடம் மகுடத்தைக் கொடுத்துவிட்டு, தனது குடும்பத்தை சுக்கிரீவனிடம் ஒப்படைத்துவிட்டு பரம்பொருளின் மடியிலே, ஸ்ரீ ராம நாமத்தை உச்சரித்தவாறே உயிர் பிரிகிறான். பரம்பொருளின் பாணம் பட்டதால் அவனது பாவங்கள் நீங்கி முக்தியடைகிறான்.

No comments: