42 ஒளி ஆண்டுகள் தூரத்தில் சூப்பர் பூமி கண்டுபிடிப்பு

பிரபஞ்சத்தில் உள்ள கிரகங்கள் பற்றி ஹார் வர்டு- சுமித் சோனியன் மையம் ஆய்வு நடத்தி வருகிறது. இந்த ஆய்வின்போது நமது பூமியைப் போன்றே ஒரு கிரகம் சுழன்று வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கிரகத்துக்கு, ஜிஜெ1214பி என்று ஆராய்ச்சியாளர்கள் பெயரிட்டுள்ளனர். இதை சூப்பர் பூமி என்று அழைக்கிறார்கள். இந்த சூப்பர் பூமி 42 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.

இந்த புதிய கிரகம் மற்றொரு சூரிய மண்டலத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. நமது பூமியை போல இந்த சூப்பர் பூமி 2.7 மடங்கு பெரியதாக இருக்கிறது.

இந்த புதிய கிரகத்தில் பாதிக்கு பாதி தண்ணீர் உள்ளது. அங்கு உயிரினங்கள் இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். இந்த சூப்பர் பூமி தன்னைத்தானே ஒரு தடவை சுற்றிக்கொள்ள 38 மணி நேரமாகிறது.

சூப்பர் பூமி எப்போதும் மிகுந்த வெப்பத்துடன் இருப்பது தெரிய வந்துள்ளது. அதாவது சாதாரணமாகவே 200 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனவே அங்கு மனிதர்கள் குடியேற இயலாது என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர் என்றாலும் “புதிய பூமி” தொடர்பாக முழுமையான ஆராய்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments: