கணணி ஹாக்கிங் மன்னர் கைது - இலண்டனில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தல்

பிரிட்டனைச் சேர்ந்த Gary Mckinnon எனும் கணிணி நிகழ்ச்சி ஒருங்கமைப்பாளர் (programmer) நேற்று வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் நாசா உட்பட பெண்டகன் போன்ற அரச கணணி நெட்வேர்க்குகளை பல வருடங்களாக ஹாக் செய்து அத்துமீறிய அனுமதியைப் பெற்று வந்த குற்றத்திற்காக இலண்டனில் வைத்து கைது செய்யப்பட்டார்.

மேலும் தனது விசாரணை இலண்டனில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் சார்பில் கோரியிருந்த மனு இன்று கோர்ட்டில் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைக்காக அவர் விரைவில் அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்படவுள்ளார். மக்கின்னன் கம்பியூட்டர் புரோகிராமிங்கில் ஒரு கிங்கராகவே தொழிற்பட்டு வந்திருக்கிறார். அமெரிக்க இராணுவத்தின் தளத்தைச் சேர்ந்த பல கம்பியூட்டர்களை ஹாக் செய்து வந்த பாரிய குற்றவாளியாக இவர் கணிக்கப்பட்டுள்ளதுடன் இதற்காக 2001ம் ஆண்டு தொடக்கம் கிட்டத்தட்ட 97 கம்பியூட்டர்களைத் தனது வீட்டில் இருந்து பயன்படுத்தி வந்திருக்கிறார். இவரால் அமெரிக்க அரசாங்கத்திற்கு ஏற்பட்ட இழப்பு இதுவரை 1 மில்லியன் டாலர்கள் என்றும் கூறப்படுகின்றது.

கோர்ட்டில் இவர் மீதான குற்றம் விசாரிக்கப்பட்ட போது தான் அமெரிக்க அரசாங்கம் பறக்கும் தட்டுக்கள் இருப்பது பற்றி ஆய்வு செய்கிறதா என்பதைக் கண்டறிவதற்கே இவ்வாறு தொழிற்பட்டதாகக் கூறியுள்ளார். அமெரிக்க அரசு சார்பாக ஆஜரான சட்டத்தரணி Paul McNulty இவ்வழக்கு சம்பந்தமாகக் கருத்து தெரிவிக்கையில் இவருடன் எந்த ஒரு தீவிரவாத கும்பலுக்கும் தொடர்பில்லை எனவும் தனியாகவே இத்தாக்குதலை இவர் மேற்கொண்டு வந்திருக்கிறார் என்றும் சிலவேளை மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்றும் கூறியுள்ளார். எனினும் குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் இவருக்கு 10 வருட சிறைத்தண்டனையுடன் 250 000 டாலர் குற்றப்பணமும் அறவிடப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments: