கோல்டன் குளோப் விருதுக்கு ஏ.ஆர்.ரகுமான் பெயர் சிபாரிசு



உலக அளவில் சிறந்த சினிமா கலைஞர்களுக்கான கோல்டன் குளோப் விருது ஆலிவுட்டில் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு 66-வது கோல்டன் குளோப் விருது பெற தகுதியானவர்கள் சிபாரிசு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் இங்கிலாந்து டைரக்டர் டேனி பாயல் இயக்கிய `சிலம்டாக் மில்லியனர்' என்ற படம் 4 விருதுகளுக்கு சிபாரிசு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் இசையமைத்தற்காக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் பெயரும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

சிலம்டாக் மில்லியனர், சிறந்த படம், சிறந்த டைரக்டர் (டேனி பாயல்), சிறந்த திரைக்கதை (சிமோன் பிïபோ) ஆகியவற்றுக்கும் கோல்டன் குளோப் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இறுதியாக வெற்றி பெற்றவர்கள் விவரம் அடுத்த மாதம் (ஜனவரி) 11-ந் தேதி அறிவிக்கப்படுகிறது.

No comments: