பத்துதலை நாகம்.... உண்மை தகவலா....? இல்லை கணணி விளையாட்டா....?


முன்னைய காலப் புராணங்களான மகாபாரதம் மற்றும் வேறு சில வரலாற்றுக் கதைகளில் நாங்கள் பத்துத் தலை நாகங்களைப் பற்றி பல தகவல்களை அறிந்திருகிறோம். ஆனால் அண்மைக்காலமாக யாழ் தொல்புரம் பொக்கணைப் பகுதியில் பத்துத் தலை நாகம் ஒன்று உலாவிவருவதாக அங்கிருந்து வெளியாகும் சில இணையத் தளங்கள் மற்றும் பத்திரிகைகளில் செய்திகள் வெளியிடப்பட்டது. இந்த பத்துத் தலை நாகம் பற்றிய தகவல் எந்த அளவிற்கு உண்மைத் தன்மையைக் கொண்டிருக்கின்றது என்பதை அறியமுடியாதுள்ளது.

சமய நம்பிக்கை என்ற வகையில் பார்க்கப் போனால் ஒவ்வொருவரினதும் நம்பிக்கையைப் பொறுத்த வரையில் இது உண்மைத் தன்மையைக் கொண்டதாக இருக்கலாம். எனினும் அந்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து பலவிதமான விறுவிறுப்பான செய்திகளும் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.

ஆனால் அது ஒருபுறம் இருக்க இந்த பத்துத் தலை நாகம் வெறும் கட்டுக் கதை என்றும், கணினி தொழில் நுட்ப வல்லுணர்களால் வடிவமைக்கப்பட்டதென்றும் பல்வேறு விதமான செய்திகளும் வெளியாகிய வண்ணமே இருக்கின்றது. ஆனால் தற்போது அதிலும் சில தவறுகளை எமது திறமைசாலிகள் கவனிப்பதில்லை. மேலே உள்ள படத்தை சற்று பார்ப்போமாயின் இரு நாகங்களின் நிழலிலும் எந்த வித வேறுபாடும் காணப்படவில்லை. அதாவது ஒரு தலை நாகத்தின் நிழல் சரியாக உள்ளது, ஆனால் பத்து தலை நாகத்தின் நிழல் ஒரு தலை பாம்பின் நிழல் போலவே உள்ளது. இந்நிலை எவ்வாறு சாத்தியமாகலாம்...? இது உண்மைக்கதையா...? இல்லை கணினியில் துல்லியமாக தொகுக்கக்கூடிய மென்பொருளான Photoshop இன் விளையாட்டா...? பொறுத்திருந்து தான் பார்ப்போம்.

No comments: