இந்த ட்ரைவில் கோப்புக்களை சேமித்து வைக்க ஒவ்வொருவருக்கும் 25 ஜிபி இடம் தரப்படுகிறது. எனவே இதில் ஏறத்தாழ சராசரியான 1000 டாகுமெண்ட்களை சேமித்து வைக்கலாம். 3,000 பாடல்களைப் பதிந்து வைக்கலாம். 10,000 பொட்டோக்களை இதில் பாதுகாத்து வைக்கலாம். இதற்கு கடவுச்சொல் பாதுகாப்பு உண்டு.
அத்துடன் இந்த கோப்புக்களை மற்றவர்கள் பார்ப்பதற்கும் அனுமதிக்கலாம். பிரைவேட்(Private) என வகைப்படுத்திவிட்டால் நீங்கள் மட்டுமே அதனைக் கையாள முடியும். ஷேர்டு(Shared) என ஒதுக்கினால் மற்றவர்களுடன் கோப்புக்களை பகிர்ந்து கொள்ள முடியும். அனைவரும் பார்க்கலாம் என்றால் பப்ளிக்(Public) என வகைப்படுத்த வேண்டும்.
இதனைப் பெற http://skydrive.live.com என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லுங்கள். இதில் உங்களுக்கென்று கணக்கு ஒன்றைத் தொடங்கி கொள்ளுங்கள்.
பின் அதில் தரப்படும் வழி நடத்தல்களின் படி சென்று கோப்புக்களை பதிவேற்றம் செய்திடலாம். உங்கள் கோப்புக்கள் வைத்திடும் ட்ரைவினை, உங்கள் கணணியில் உள்ள மற்ற வன்தட்டு ட்ரைவ் பிரிவுகளில் ஒன்றாக இயக்கலாம்.
இதனால் நீங்கள் ரகசியமாக வைத்துப் பார்க்க வேண்டிய கோப்புக்களை உங்கள் கணணியில் வைக்காமல் ஓன்லைன் ட்ரைவில் வைக்கலாம். உங்கள் அனுமதியின்றி யாரும் பார்த்துவிட முடியாது. இந்த அனைத்து வசதிகளும் இலவசம் என்பது இதன் உன்னத சிறப்பாகும்.
No comments:
Post a Comment