அப்பிள் தனது அடுத்த தயாரிப்பான iphone5 ஐ நோக்கி......!


அப்பிள் தனது ஐபோன் வரிசையில் அடுத்த வெளியீடான ஐபோன் 5 வினை எதிர்வரும் செப்டம்பர் மாதம் வெளியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாக அப்பிள் நிறுவனத்தின் உற்பத்திகள் வெளிவருவதற்கு முன்னரே அவற்றைப்பற்றிய எதிர்பார்ப்புகள், செய்திகள் மற்றும் வதந்திகளுக்கு குறைவிருக்காது. அதனைப் போலவே இம்முறையும் ஐபோன் 5 பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகமாகியுள்ளது.

ஐபோன் 5 ஆனது தனது கடைசி வெளியீடான ஐபோன் 4 வை விட வேகமானதும், ஐபேட் 2 கணனியில் உபயோகிக்கப்பட்டதுமான ஏ 5 புரவுசரைக் கொண்டிருக்குமெனவும் 8 மெகா பிக்ஸல் கெமராவைக் கொண்டிருக்குமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இது அப்பிள் அண்மையில் அறிமுகப்படுத்திய ஐகிளவுட் வசதியினையும் கொண்டிருப்பதுடன் வடிவத்தில் ஐபோன் 4னை ஒத்ததாகவும் அதனை விட பெரிய தெளிவான திரையை கொண்டிருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கு ஐபோன் 5 என பெயரிடாமல் ஐபோன் 4ஜி அல்லது 4 எஸ் எனப் பெயரிடலாம் எனவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன. அப்பிள் தனது ஐபோன் 4வை கடந்த வருடம் ஜூன் மாதம் வெளியிட்டிருந்த போது அது மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

இதேவேளை அப்பிள் மத்திய தர சந்தைகளை கருத்திற் கொண்டு குறைந்த விலையிலான ஐபோனையும் தயாரித்து வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: