இன்றைய கால கட்டத்தில் கணினியில் பல்வேறு வகையான கோப்புக்களை பயன்படுத்துகின்றோம். அதில் ஒவ்வொன்றும் வித்தியாசமான பயன்பாடுகளைக் கொண்டுள்ளன. உதாரணமாக போட்டோ, ஓடியோ, வீடியோ, PDF, OFFICE கோப்புக்கள் என பல இவற்றை திறந்து கொள்வதாயின் அந்தந்த கோப்புக்களை திறக்க பயன்படும் மென்பொருட்களிலே திறக்க முடியும். பலதரப்பட்ட கோப்புக்களை ஓரிடத்தில் திறந்து கொள்ள துணைபுரிகிறது FREE OPENER என்ற மென்பொருள். இந்த மென்பொருள் மூலம் 70க்கும் மேற்பட்ட வகையான கோப்புக்களை திறந்து கொள்ள முடியும். இதன் சிறப்பம்சம்: 1. JPEG,GIF, bmp போன்ற பிரிவைச் சேர்ந்த புகைப்படங்களை திறந்து பார்க்க முடியும். 2. avi, flv, mid, mkv, mp3, mp4, mpeg, mpg, mov, wmv போன்ற மீடியா கோப்புக்களை திறந்து மீடியா பிளேயராக பயன்படுத்த முடியும். 3. photoshop, pdf, html, office, java , DOC, xls போன்ற கோப்புக்களையும் இலகுவாக திறந்து கொள்ளலாம். இந்த மென்பொருள் விண்டோஸ் இயங்கு தளத்தில் செயற்படவல்ல மிக சிறந்த பயனுள்ள ஓர் மென்பொருளாகும். அத்துடன் இதன் அளவு 20MB ஆகும். |
தரவிறக்கம்
No comments:
Post a Comment