இன்னும் 760 கோடி ஆண்டுகளில் பூமி இருக்காது.அதை சூரியன் விழுங்கி விடும் என வானியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இதுகுறித்து இங்கிலாந்தின் சஸ்ஸக்ஸ் பல்கலைக்கழகத்தின் வானியல் பிரிவைச் சேர்ந்த டாக்டர் ராபர்ட் ஸ்மித் தலைமையிலான நிபுணர் குழு ஆய்வு நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.
சூரியன் நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டு வருகிறது. இப்படியே போனால் இன்னும் 760 கோடி ஆண்டுகளில் அது பூமியை விழுங்கி விடும். சூரியனின் வெப்பம் காரணமாக பூமியில் எதுவும் இருக்காது எல்லாம் சாம்பலாகி விடும். சூரியனின் வெப்பத்தால் கடல்கள் அனைத்தும் ஆவியாகி முற்றிலுமாக வற்றிப் போய் விடும் என்கிரார் ராபர்ட் ஸ்மித்.
இதைத் தவிர்க்க முடியாதா பூமியைக் காப்பாற்ற முடியாதா என்ற கேள்விக்கு ஸ்மித் பதிலளிக்கையில் இதற்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது.வான்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் ஏதாவது ஒரு பெரிய விண்கல்லை பூமியின் புவி வட்டப் பாதைக்கு இழுத்து அதனுடன் பூமியை மோத விட வேண்டும். அப்படி மோதினால் நமது புவி வட்டப் பாதை மாறி வேறு பாதைக்கு நாம் வீசப்படுவோம். அப்படிச் செய்தால் சூரியனின் கோரப் பிடியிலிருந்து பூமி தப்பலாம்.
இது சாத்தியமா பேத்தலாக இருக்கிறதே என்று நினைக்கக் கூடாது. இன்னும் சில நூற்றாண்டுகளில் இப்படி ஒரு மோதலை ஏற்படுத்தக் கூடிய தொழில்நுட்பத்தை நமது விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே பூமி அழியலாம் என்று பயப்படுவதை விட தப்பி விடும் என்ற நம்பிக்கையுடன் நாம் இருக்கலாம் என்கிறார் ஸ்மித்.
அதற்குள் புதிதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ள புவி போன்ற மற்றைய கிரகங்களுக்கு மனிதன் புலம் பெயர்ந்துவிடுவான். 760 கோடி ஆண்டுகள் எதற்கு? இன்றுள்ள மனிதர் எவரும் மேலும் 150 ஆண்டுகளுக்கு பின்னர் உயிருடன் இருக்கமாட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment