பேஸ்புக் பயன்பாட்டாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று இணையதள பாதுகாப்பு நிறுவனமான சோஃபோஸ், எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமூக தளமான ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் நட்பு வட்டாரத்திற்கு ஸ்பேம் தகவல் ஒன்றை அனுப்பும் மோசடி நடைபெற்று வருவதாக அது எச்சரித்துள்ளது.
லைக் ஜக்கிங் என பெயரிடப்பட்டுள்ள இந்த மோசடியில் பல்லாயிரக்கணக்கான ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்கள் இரையாகியுள்ளனர் என்று சோஃபோஸ் நிறுவனம் தனது வலைப்பதிவுகளில் தெரிவித்துள்ளது.
இந்த மனிதர் கடந்த 8 ஆண்டுகளாக தன்னைத் தானே படம் எடுத்துக் கொள்கிறார் என்ற தகவலுடன் ஒரு செய்தி ஏராளமான ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதனுடன் உள்ள சுட்டியை கிளிக் செய்யவும் அது ஊக்குவிக்கிறது.
அவ்வாறு கிளிக் செய்யும் போது, ஒரு வெற்றுப்பக்கம் தோன்றி, மேலும் தொடர இங்கே கிளிக் செய்யவும் என்ற தகவல் இடம்பெற்றுள்ளது.
அதைக் கிளிக் செய்தால் மீண்டும் அதேபோன்றதொரு தகவல் வருகிறது. மேலும் இந்தத் தகவலை ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் அனைத்து நண்பர்களுக்கும் அனுப்பி வைக்கிறது. இதன் மூலம் இந்தத் தகவல் அனைவருக்கும் பரவி வருகிறது என்று சோஃபோஸ் எச்சரித்துள்ளது.
உங்கள் கம்ப்யூட்டரில் தானாகவே விளம்பரங்களை பதிவிறக்கம் செய்யும் மென்பொருள் ஒன்றை உங்களது கம்ப்யூட்டரில் பொருத்துவதற்கான ஒரு மோசடி ஃபேஸ்புக்கில் நடப்பதாக சோஃபோளூ; கடந்த வாரத்தில் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment