டென்னிஸ் களத்தில் மீண்டும் கிளிஜ்ஸ்டர்ஸ்


முன்னாள் முதல் நிலை டென்னிஸ் வீராங்கனை கிம் கிளிஜ்ஸ்டர்ஸ் மீண்டும் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளார்.

இது குறித்து அறிவிக்க அவர் இன்று வடக்கு பெல்ஜியம் நகரான பிரீவில் ஊடகவியலம்ளர் மாநாடொன்றை நடத்தவுள்ளார்.

25 வயதான கிளிஜ்ஸ்டர்ஸ் கடந்த 2007 ஆம் ஆண்டு டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து அவர் கண்காட்சி டென்னிஸ் போட்டிகளில் விளையாடிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த கிம் கிளிஜ்ஸ்டர்ஸ் 2005 ஆம் ஆண்டு அமெரிக்க ஓபன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளதுடன் 3 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இறுதிப்போட்டிவரை முன்னேறியுள்ளார். அவர் இதுவரை 34 ஒற்றையர் பட்டங்களை வென்றுள்ளமை விசேட அம்சமாகும்.

No comments: