இந்தியாவின் முதல் வெப் பிரவுசர் ‘எபிக்’ அறிமுகம்












மென்பொருள் துறையில் இந்தியா வெற்றிக்கொடி நாட்டி வரும் வேளையில், மேலும் ஒரு மகுடமாக, உள்நாட்டிலேயே வெப் பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளது.

‘எபிக்’ எபிக் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் பிரவுசர், பெங்களூருவில் உள்ள ஹிட்டன் ரிப்ளக்ஸ் என்று சாப்ட்வேர் நிறுவனம் உருவாக்கியுள்ளது. மோஸில்லா பயர்பாக்சை அடிப்படையாகக் கொண்டு எபிக் வெப் பிரவுசர் தயாரிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து, ஹிட்டன் ரிப்ளெக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

இது சர்வதேச அளவில் முதன் முறையாக ஆன்டிவைரஸ் பாதுகாப்புடன் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், ஆன்டிவைரஸ் மற்றும் ஆன்டிஸ்பைவேர் தொகுபபுகள் இசெட்டை அடிப்படையானது ஆகும் என்றும், பயனாளர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு இந்த வெப் பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், உங்கள் விருப்பத்திற்கேற்ப தீம்களை மாற்றிக்கொள்ளலாம் என்றும் இதற்காக 1,500 தீம்கள் உள்ளதாகவும், இந்த எபிக் வெப் பிரவுசர் 12 இந்திய மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஒன் கிளிக் பிரைவேட் ‌டேட்டா டெலீசன், பிளாஷ் குக்கீ டெலிசன், பில்ட் இன் மற்றும் நோ ஸ்டோரேஜ் ஆப் பிரவுசிங் ஹிஸ்ட்ரி, பாஸ்டர் டவுன்லோட்ஸ் மற்றும் பிரவுசிங் உள்ளிட்ட சிறப்பம்சங்களைக் கொண்டு இந்த பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவி்க்கப்பட்டுள்ளது.

பூமியை சூரியன் விழுங்கி விடுமா...?

இன்னும் 760 கோடி ஆண்டுகளில் பூமி இருக்காது.அதை சூரியன் விழுங்கி விடும் என வானியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இதுகுறித்து இங்கிலாந்தின் சஸ்ஸக்ஸ் பல்கலைக்கழகத்தின் வானியல் பிரிவைச் சேர்ந்த டாக்டர் ராபர்ட் ஸ்மித் தலைமையிலான நிபுணர் குழு ஆய்வு நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.

சூரியன் நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டு வருகிறது. இப்படியே போனால் இன்னும் 760 கோடி ஆண்டுகளில் அது பூமியை விழுங்கி விடும். சூரியனின் வெப்பம் காரணமாக பூமியில் எதுவும் இருக்காது எல்லாம் சாம்பலாகி விடும். சூரியனின் வெப்பத்தால் கடல்கள் அனைத்தும் ஆவியாகி முற்றிலுமாக வற்றிப் போய் விடும் என்கிரார் ராபர்ட் ஸ்மித்.

இதைத் தவிர்க்க முடியாதா பூமியைக் காப்பாற்ற முடியாதா என்ற கேள்விக்கு ஸ்மித் பதிலளிக்கையில் இதற்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது.வான்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் ஏதாவது ஒரு பெரிய விண்கல்லை பூமியின் புவி வட்டப் பாதைக்கு இழுத்து அதனுடன் பூமியை மோத விட வேண்டும். அப்படி மோதினால் நமது புவி வட்டப் பாதை மாறி வேறு பாதைக்கு நாம் வீசப்படுவோம். அப்படிச் செய்தால் சூரியனின் கோரப் பிடியிலிருந்து பூமி தப்பலாம்.

இது சாத்தியமா பேத்தலாக இருக்கிறதே என்று நினைக்கக் கூடாது. இன்னும் சில நூற்றாண்டுகளில் இப்படி ஒரு மோதலை ஏற்படுத்தக் கூடிய தொழில்நுட்பத்தை நமது விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே பூமி அழியலாம் என்று பயப்படுவதை விட தப்பி விடும் என்ற நம்பிக்கையுடன் நாம் இருக்கலாம் என்கிறார் ஸ்மித்.

அதற்குள் புதிதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ள புவி போன்ற மற்றைய கிரகங்களுக்கு மனிதன் புலம் பெயர்ந்துவிடுவான். 760 கோடி ஆண்டுகள் எதற்கு? இன்றுள்ள மனிதர் எவரும் மேலும் 150 ஆண்டுகளுக்கு பின்னர் உயிருடன் இருக்கமாட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.