யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு மிக மிகச் சிறிய கணினி வர இருக்கிறது. எம்கே 802 என்று அழைக்கப்படும் இந்த புதிய கணினி ஒரு சிறிய யுஎஸ்பியின் அளவிற்குச் சிறயதாக இருக்கிறது. இது ஒரு ஆன்ட்ராய்டு கணினி ஆகும். அதாவது ஆன்ட்ராய்டு 4.0 மற்றும் லினக்ஸ் இயங்கு தளங்களில் இயங்குகிறது. இந்த சிறிய கணினி 74 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட இருக்கிறது.


சீனாவைச் சேர்ந்த ரிக்கோமேஜிக் என்ற நிறுவனம் இந்த மைக்ரோ கணினியைக் களமிறக்குகிறது. சமீபத்தில் வெளியான ராஸ்வெரி பையை இந்த புதிய கணினி ஒத்திருக்கிறது.

மேலும் இந்த சிறிய கணினி 1.5 ஜிஹெர்ட்ஸ் ஆல் வின்னர் எ10 கோர்டெக்ஸ் எ8 எஆர்எம் ப்ராசஸர், 512எம்பி டிடிஆர்3 மெமரி மற்றும் வைபை வசதிகளைக் கொண்டுள்ளது.

அதோடு மாலி400 க்ராபிக்ஸ் ப்ராசஸிங் யுனிட், 4ஜிபி ப்ளாஷ் சேமிப்பு, மைக்ரோ எஸ்டி ஸ்லாட் மற்றும் 2 யுஎஸ்பி போர்ட்டுகள் ஆகியவையும் இந்த சிறிய கணினியில் உள்ளன.

இந்த சிறிய கணினி 1080பி எச்டிஎம்ஐ அவுட்புட் கொண்டிருப்பதால் இதில் வீடியோவும் சாத்தியமாகும். மேலும் இந்த கணினியில் ஆன்ட்ராய்டு வெர்ச்சுவல் கீபோர்டு அல்லது வயர்லஸ் மவுஸ் மற்றும் வயர்லஸ் கீபோர்டு ஆகியவற்றை இணைத்துக் கொள்ளலாம்.

மேலும் பல வசதிகளுடன் வரும் இந்த மைக்ரோ கணினிக்கு ரசிகர்கள் கூட்டம் பெருகும் என நம்பலாம்.

No comments: