தனது 500 வது இலக்கை நோக்கி நெருங்கிக்கொண்டிருக்கும் facebook.....


பிரபல சமூகவலைப்பின்னல் தளமான பேஸ்புக் 500 மில்லியன் பாவனையாளர்கள் என்ற இலக்கினை அடையவுள்ளதாகவும் அவ்வறிவிப்பை பெரும்பாலும் இந்த வாரம் மேற்கொள்ளுமெனவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இத் தொகையானது உலக சனத்தொகையின் 8% வீதமாகும்.

இம் மைல்கல்லை கொண்டாடும் வகையில் " பேஸ்புக் கதைகள் " எனும் விசேட கதைத் தொகுப்பையும் அவ் வலையமைப்பு வெளியிடவுள்ளது. மேற்படி தொகுப்பானது பாவனையாளர்களின் வாழ்க்கையை பேஸ்புக் எவ்வாறு மாற்றியுள்ளது என்பது தொடர்பிலான விடயங்களை உள்ளடக்கியுள்ளது.

அனைத்து பாவனையாளர்களும் தங்கள் கதைகளை சமர்ப்பிக்கமுடியும். பாவனையாளர்களால் விரும்பப்படும் அதிகமான கதைகள் இத்தொகுப்பினுள் உள்ளடக்கப்படும். பேஸ்புக் தனது வலையமைப்பினை 150 மில்லியன் பேர் கையடக்க தொலைபேசிகள் மூலம் உபயோகிப்பதாக சமீபத்தில்அறிவித்திருந்தது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த பேஸ்புக் வலையமைப்பின் சந்தைப்படுதல் இயக்குனர், இது தாம் ஏற்கனவே எதிர்பார்த்தவொன்றெனவும் , இதை வேறு வேறுவிதமாக கொண்டாட எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

பேஸ்புக் சமூகவலைப்பின்னல் தளமானது 2004ம் ஆண்டு மார்க் ஸுக்கர்பேர்க் என்பவரினால் அவரது சக மாணவர்களான எடுயுரடொ சவெரின் , டஷ்டின் மொஸ்கொவிட்ஷ் மற்றும் கிரிஷ் ஹக்ஷ் ஆகியோரின் உதவியுடன் உருவாக்கப்பட்டதாகும்.

No comments: