பயர்பாக்ஸ் 3.6 – எச்சரிக்கை


பிரவுசர்களில் மாற்றம் வேண்டும் என விரும்புபவர்கள் அனைவரும் எடுத்துக் கொள்வது பயர்பாக்ஸ் பிரவுசராகும். அவ்வப்போது இதனைத் தயாரித்து வழங்கும் மொஸில்லா நிறுவனம், இந்த பிரவுசருக்கான அப்டேட் பைல்கள் மூலம் பல கூடுதல் வசதிகளைத் தந்து வருவது இதன் ஒரு சிறப்பாகும்.

இதில் அண்மையில் ஒரு நல்ல வசதியைக் காண நேர்ந்தது. பல இணைய தளங்களை அடுத்தடுத்து திறந்து பார்க்கையில், அவை டேப்களாக பிரவுசரில் அமர்ந்து கொள்கின்றன. இவற்றில் தேவையானதைப் பார்க்க, மவுஸ் கர்சரால் டேப் சென்று கிளிக் செய்திடலாம்.

அல்லது கண்ட்ரோல் +டேப் அழுத்தி டேப்களின் ஊடே சென்று, தேவையான டேப் கிடைத்தவுடன் என்டர் தட்டி தளத்தைப் பார்க்கலாம். சில வேளைகளில் ஒரே தளத்தின் இரு வேறு பக்கங்களை வெவ்வேறு டேப்களில் வைத்திருப்போம்.

டேப்களில் பார்க்கும் போது, அவை ஒரே மாதிரியாகக் காட்சி அளிக்கும். எந்தப் பக்கம் எந்த டேப்பில் உள்ளது என்று தெரியாது. இந்தக் குறையை பயர்பாக்ஸில் உள்ள புது வசதி நீக்குகிறது.

இதனைச் செயல்படுத்த பயர்பாக்ஸ் பிரவுசரைத் திறந்து அட்ரஸ் பாரில் about:config என டைப் செய்திடவும். இப்போது ஓர் எச்சரிக்கை கிடைக்கும். அதனைக் கண்டு கொள்ள வேண்டாம்.

அடுத்து config பக்கம் கிடைக்கும். கீழாக ஸ்குரோல் செய்து போகவும். அங்குbrowser.ctrltab.previews என்ற வரி கிடைக்கும். இதனுடைய வேல்யுவினை கூணூதஞு என மாற்றவும். அடுத்து பயர்பாக்ஸ் பிரவுசரை மீண்டும் இயக்கவும்.

இனி கண்ட்ரோல் + டேப் கொடுத்து டேப்களைப் பார்க்கையில் அதில் அந்த டேப்பில் உள்ள தளத்தின் சின்ன பிரிவியூ காட்சி காட்டப்படும். நாம் தேடுவதனை உறுதி செய்து திறந்து பார்க்கலாம்.

பயர்பாக்ஸ் 3.6 – எச்சரிக்கை

அண்மையில் ஜனவரியில் வெளியான பயர்பாக்ஸ் 3.6 பிரவுசர் தொகுப்பில் ஹேக்கர்கள் நுழையக் கூடிய பிழையான இடம் இருப்பதனை மொஸில்லா உறுதி செய்துள்ளது. இது சற்று மோசமான இடம் தான் என்றும் ஒத்துக் கொண்டுள்ளது.


இந்த பிழையை வரும் 3.6.2 பதிப்பில் சரி செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளது. நாளை இந்த தொகுப்பு வெளிவரலாம். அதுவரை இந்த (பயர்பாக்ஸ் 3.6) தொகுப்பினைப் பயன்படுத்துவதனைத் தள்ளிப் போடலாம்.

1 comment:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in