வின்டோஸ் 7 வெற்றி பாதையில்.....


கூகிளின் வளர்ச்சியால் தலையை சொறிந்து கொண்டிருந்த மைக்கிரோசொப்ருக்கு கொஞ்சம் ஆறுதலான விடயம் அண்மையில் அதனால் மிக பிரமாண்டமாக வெளியிடப்பட்ட Windows 7 விற்பனை கொடிகட்டி பறப்பதுதான்.

பெருமளவான Vista மற்றும் Windows XP பாவனையாளர்கள் Windows 7 க்கு மாறிவருவது குறிப்பிடத்தக்கது. ஐப்பசி 22 ல் Windows 7 வெளியிடப்பட்ட பிறகு அதன் விற்பனை, 2007 தை மாதத்தில் Windows Vista வெளியிடப்பட்டபோது அதன் விற்பனையிலும் பார்க்க 234% உயர்வாக இருப்பதாக தரவுகள் கூறுகின்றன.

Net Application எனும் நிறுவனம் அண்மையில் கணிணி இயங்கு தளங்களின் பாவனை தொடர்பாக, இணைய உலாவிகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகளை கொண்டு மேற்கொண்ட ஆய்வொன்றில், NetApplication நிறுவனத்தால் ஆய்வு நடத்தப்பட்ட அனைத்து கணினி களிலும் கார்த்திகை 1 ம் திகதி 3.6% ஆனவை Windows 7 இயங்குதளத்தை கொண்டிருந்த்து. இது Windows 7 உத்தியோகமாக வெளியிடப்பட்ட ஐப்பசி 22 ல் 1.99% ஆகவும் அதற்கு முன்னைய தினம் 21 ல் 1.89% ஆகவும் இருந்த்தாக கூறப்படுகிறது.

2009 ஐப்பசி மாதம் எல்லா வகையான இயங்கு தளங்களை கொண்டிருந்த கணினிகள் 92.52%. சோகம் என்னவென்றால் இது 2008 மார்கழி மாதம் 94% ஆக இருந்தது தான்.

Mac OS X -5.27 %
Linux at -0.96 %

அமேசன் இணையதளத்தில் Windows 7 க்கு செய்யப்பட்ட முற்பதிவுகளின் எண்ணிக்கை, 2007ல் வெளிவந்த ஹரிப்பொட்டர் புத்தகங்களின் இறுதிப்பாகமான Harry Potter and the Deathly Hallows, புத்தகத்திற்கு செய்யப்பட்ட முற்பதிவுகளின் எண்ணிக்கை யிலும் பார்க்க அதிகம் என அமேசன் இணையதளம் தெரிவித்திருக்கிறது என்றால் பாருங்களேன்.

பிரித்தானியாவின் பிரபலமான guardian.co.uk இணையத்தளம் தனது தளத்துக்கு வருகை தருபவர்களில் Windows 7 பாவனையாளர்களின் எண்ணிக்கை Linux பாவனையாளர்களை மிஞ்சியிருப்பதாக அறிவித்திருக்கிறது. கடந்த காலங்களில் Windows 7 பாவனை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வந்ததுடன் ஜூன் மாதம் இது முதன்முறையாக Iphone பாவனையாளர்களை முந்தியிருந்ததாக guardian இணையத்தளம் மேலும் தெரிவித்திருக்கிறது.

Windows 7 ன் இந்த வெற்றிக்கு காரணம் இது Windows Vista உடன் ஒப்பிடும் போது நல்ல வேகம் குறிப்பிடத்தக்க பாதுகாப்பு கொண்டிருப்பதுடன் குறைந்த விலையில் கிடைப்பது மற்றும் சாதாரண தர கணினி, களிலும் நிறுவகூடியதாக இருப்பதுதான்.

கூகிள் மற்றும் அப்பிள் கம்பனிகளுடன் கடும் போட்டியில் இருக்கும் மைக்கிரோசொப்ருக்கு Windows 7 கொஞ்சமாவது ஆறுதலை கொடுத்திருக்கும்.

No comments: