பிளாஸ்டிக், உலோகத்திற்கு பதிலாக மூங்கிலை பயன்படுத்தி மடிக்கணினிகள் (லேப்டாப்) தயாரிக்க தைவான் நாட்டு கம்பயூட்டர் உற்பத்தி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் புதிய மூங்கில் மடிக்கணினியை உருவாக்கியுள்ள அசுஸ்டெக் நிறுவனம், அதற்கு அசுஸ் ஈகோ புக் (Asus Eco Book) என பெயரிட்டுள்ளது.
மடிக்கணினி திரை மற்றும் மைக்ரோ பிராசசரில் ஏற்படும் வெப்பத்தை தங்கக் கூடிய தன்மை மூங்கில்-க்கு உள்ளதா என்பது குறித்து தொழில்நுட்ப வல்லுனர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும், இது முற்றிலுமான வெற்றியடைந்த பின்னரே வர்த்தக ரீதியாக மூங்கில் மடிக்கணினிகள் விற்பனைக்கு வரும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிளாஸ்டிக் மற்றும் உலோகத்தை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மடிக்கணினிகள் மற்றும் கணினி தொடர்பான உபகரணங்கள் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தி வரும் நிலையில், மூங்கிலை கொண்டு மடிக்கணினி தயாரிக்கும் பணியை அசுஸ்டெக் நிறுவனம் கண்டறிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment