நீங்கள் வலைப்பக்கத்தில் உலவும் போது எங்கேயாவது தமிழில் தட்டச்சு செய்ய வேண்டி இருந்தால் கூகுளின் Indic Translate
அல்லது வேறு எதாவது தமிழ் உரை மாற்றிகளை கொண்டு
பயன்படுத்துவீர்கள்.
இப்போது கூகிள் எந்த பக்கத்திலும் தமிழ் மொழியில் அடிக்குமாறு ஒரு புதிய வசதியை வெளியிட்டுள்ளது. இதனைக்கொண்டு நீங்கள்,
1. தமிழில் மின்னஞ்சல் அடிக்கலாம்.
2. Google Search இல் தேடலாம்.
3. தமிழில் உரையாடலாம் (chat )
4. பிற சமுக வலைத்தளங்களிலும் தமிழில் குறுஞ்செய்தி அனுப்பலாம்.
5. இது எந்த வலைப்பக்கத்திலும் இயங்கக்கூடியது.
6. மேலும் தெலுங்கு, மலையாளம், கன்னடம், அரபிக் போன்ற
மொழிகளிலும் செய்யல்படுகிறது.
7. ஆனால் இதை ஏற்கனவே தமிழ் மொழி வசதி உள்ள Orkut, Gmail,
Blogger மற்றும் Knol போன்றவற்றில் பயன்படுத்த தேவையில்லை.
இதை நீங்கள் பயன்படுத்த ஒரு புக்மார்க் செய்ய வேண்டும்.
[ அ Type in தமிழ் ]
மேலே உள்ள இணைப்பை வலது கிளிக் செய்து Add to Favorites என்பதை சொடுக்கவும்.
2. பாதுகாப்பு எச்சரிக்கை ஒன்று வரும். அதை yes கொடுக்கவும்.
3. பின்னர் Add கொடுத்தால் உங்கள் உலவியின் கருவிப்பட்டைக்கு கீழே அமர்ந்து விடும்.
இவ்வாறு உட்கார்ந்து இருக்கும்.
Firfox பயனர்களுக்கு :
1. [ அ Type in தமிழ் ]
மேலே உள்ள இணைப்பை வலது கிளிக் செய்து Bookmark this link
என்பதை சொடுக்கவும்.
2.Bookmarks Toolbar இல் சேமிக்கவும்.
பயன்படுத்தும் முறை :
உங்கள் உலவியில் உள்ள [ அ Type in தமிழ் ] இணைப்பை
சொடுக்கினால் கூகுளின் மொழிபெயர்ப்பு வசதி கிடைக்கும்.
வலைப்பக்கத்தில் உள்ள எந்த உரைப்பெட்டியிலும் அ என்ற குறியீடு இருக்கும்.நீங்கள் Ctrl+G அழுத்தி ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிக்கு மாறிக்கொள்ளலாம்.
மீண்டும் வேண்டாம் என்றால் கருவிப்பட்டையில் உள்ள அதே
இணைப்பை சொடுக்கினால் வசதி மறைந்துவிடும்.
மேலும் மற்ற உலவிகளில் சேர்ப்பதைப் பற்றியும் மற்ற
மொழிகளின் இணைப்பு வேண்டுமெனில் இதைப்பார்க்க. நன்றி.
மேலதிக விபரம் இங்குபார்வையிடலாம்.
ஜீ-மெயிலிலும் இவ்வசதி இணைக்கப்பட்டுள்ளது
மாசுக்களால் பூமி வெப்பமயம்: ஆண்டுக்கு 3 லட்சம் பேர் பலி
உலகம் வெப்பமயமாகி வருவதால் ஏற்படும் பேரழிவுகளால் ஆண்டுக்கு 3 லட்சம் பேர் இறப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. தொழிற்சாலை, வாகனப்புகை உட்பட பல்வேறு மாசுக்களால் பூமி வேகமாக வெப்பமயமாகி வருகிறது.இதனால் பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு அனல் காற்று வீசுவதும், புயல், சூறாவளி தாக்குதல், காட்டுத் தீ போன்ற இயற்கை பேரழிவுகள் அதிகரித்துள்ளன.
வெப்பமயம் பற்றி ஐ.நா. முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னன் தலைமையிலான "உலக மனிதநேய அமைப்பு" முதல்முறையாக விரிவான ஆய்வு நடத்திய அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில், வெப்பமயத்தால் ஏற்படும் பின்விளைவுகளால் உலகளவில் இப்போது ஆண்டுக்கு 3 லட்சம் பேர் இறப்பதாகவும், ஆண்டுக்கு 30 கோடி மக்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநிலை நீடித்தால், 2030ம் ஆண்டுக்குப் பிறகு வெப்பமயத்தால் ஏற்படும் பேரழிவுகளால் இறப்போர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இதன்படி இறப்போரின் எண்ணிக்கை ஆண்டுக்கு 5 லட்சமாக உயரும் என்று அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டு உள்ளது.
பருவநிலை மாற்றத் தால் உலகளவில் இப்போது ஆண்டுக்கு ரூ.6 லட்சம் கோடிக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என்றும் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது.
அறிக்கையை தாக்கல் செய்து கோபி அன்னன் அளித்த பேட்டியில் கூறியதாவது:
பருவநிலை மாற்றத்தால் மனித இனத்துக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை இனிமேலும் அலட்சியப்படுத்த முடியாது. இப்போது நாம் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறோம். இது தொடர்பாக உலகளவில் உடனடியாக விவாதித்து மனித இனத்தை காப்பாற்ற முக்கிய முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு கோபி அன்னன் கூறினார்

Subscribe to:
Posts (Atom)