கூகுள் குரோமை விட 112% அதிக வேகம் கொண்ட மைக்ரோசாப்ட் ‘எட்ஜ்’ உலாவி



தற்போது இணையதளங்களில் உலாவுவதற்கு வசதியாக இருக்கும் உலாவிகளில் கூகுள் குரோம் உலாவியே உலகெங்கிலும்  மிகவும் வேகமானதாகவும் சிறந்ததாகவும் இருந்து வருகிறது. வரும் 29-ந்தேதி புதிதாக வெளிவர உள்ள மைகரோசாப்டின் விண்டோஸ் 10 இயங்குதளத்தில் அதிவேக உலாவி ஒன்று புதிதாக இணைக்கப்படுகிறது. அதற்கு ‘எட்ஜ்’ என பெயரிடப்பட்டுள்ளது.
விரைவில் வெளிவர உள்ள இந்த அதிவேக உலாவி கூகுள் குரோமுக்கு போட்டியாக இருக்கும் என ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், விண்டோஸ் தனது வலைத்தளத்தில் எட்ஜ் பிரவுசரை பற்றி பல பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளது.
கூகுள் ஆக்டேன், ஆப்பிள் ஜெட்ஸ்டிரீம், வெப்கிட் சன்ஸ்பைண்டர், சபாரி உள்ளிட்ட உலாவிகளுடன் சோதனை செய்து பார்க்கப்பட்டது. இதில், மற்றவைகளை விட குறிப்பாக கூகுள் குரோமை விட மைக்ரோசாப்ட் எட்ஜ் உலாவி 112% அதிக வேகத்துடன் இயங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்பிள் வாட்சின் பயன்பாடுகள்







1. உடல் நலம் குறித்து முக்கிய தகவல்களை அளிக்கும் விதமாக பல சென்சார்களும் செயலிகளும் இருக்கின்றது.

2. உங்களுக்கு தேவையானவற்ற அறிந்து கொள்ளும் ஆப்ஷனை ஆப்பிள் வாட்ச் மிகவும் எளிமையாக்கியுள்ளது, வாட்ச் ஸ்கிரீனில் கீழ் இருந்து மேல் புறமாக ஸ்வைப் செய்தால் போதுமானது.

3. புதிய ஆப்பிள் வாட்ச் கிட்டத்தட்ட அனைத்து செயலிகளையும் சப்போர்ட் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. பல கருவிகளை போன்றே ஆப்பிள் வாட்ச்களையும் நீங்கள் உங்களது குரலை கொண்டு இயக்க முடியும்.

5. ஐபோனுக்கு வரும் நோட்டிபிகேஷன்களை அறிந்து கொள்ள ஆப்பிள் வாட்ச் எச்சரிக்கை செய்யும்.

6. ஐபோனுக்கு வரும் குறுந்தகவல்களை ஆப்பிள் வாட்ச் மூலம் பார்த்து அதற்கு பதில் அளிக்கவும் முடியும்.

7. ஆப்பிள் வாட்ச் மூலம் நீங்கள் அழைப்புகளை ஏற்க முடியும்.

8. ஆப்பிள் வாட்ச் பேட்டரியானது, அதிகபட்சம் 18 மணி நேரம் வரை இருக்கும் என டிம் குக் தெரிவித்துள்ளார்

- நன்றி  ஈகுருவி.கொம் -